Campaign messages in Tamil
குழந்தை வளர்ப்பு பிரச்சாரம் – 2019:
பனிஷ்மென்ட் vs பாஸிட்டிவ் டிசிப்லின் - இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம்
நாள் 10:
சிறு வயதில் அடிக்கடி தண்டனைக்கு உள்ளான பிள்ளைகள், அவர்கள் பெரியவர்கள் ஆன பிறகும், அ
தை சார்ந்த அவமானம்த்தையும், கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் சுமக்கிறார்கள்.
தண்டனை, அதிருப்தியையும், வன்முறையையும் சமூகத்தில் நிலைத்து இருக்க செய்கிறது.
பிள்ளைகளை, நாம் மரியாதையுடன் ஒரு போஷாக்கான சூழலில் வளர்த்தால், அவர்கள், வளர்ந்தபின்
ஒரு பொறுப்புடையவர்களாகவும், மற்றவர்களின் உணர்ச்சியை புரிந்து கொள்பவர்களாகவும்
இருக்கிறார்கள்.
நேர்நிறை நல்வழிப்படுத்தல், (பாசிடிவ் டிசிப்ளின்) ஒரு கருணையுடைய சமூகத்தை
உருவாக்குகிறது.
மூளையை பற்றிய தகவல்:
பெற்றோர்கள், ஆசிரியர்கள், பராமரிப்பாளர்கள், இவர்கள் மூளையை வளர்ப்பவர்கள். நாம்
பிள்ளைகளுடன் வைத்திருக்கும் தொடர்புதான் அவர்களின் மூளையை வடிவமைக்கிறது.
அக்கறையுள்ள ஒரு பிள்ளையை வளர்ப்பதற்கு அக்கறையுடன் நாம் அவர்களை வளர்க்கவேண்டும்.
இந்த தலைப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்கள் இணையதளத்தில் உள்ள “தண்டனை –
உதவியா அல்லது தடங்கலா” என்கின்ற சிற்றேட்டை படிக்கவும்.
நாள் 9:
“நீ, உன் விளையாட்டு பொருட்களை உன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நீ, அதன்
மேல் இவ்வளவு சுயநலமாகவும், சொந்தம் கொண்டாடவும் கூடாது. உன்னால் பகிர்ந்து கொள்ள
முடியவில்லை என்றால், நான் எல்லாவற்றையும், உள்ளே வைத்து விடுவேன். யாருக்கும் கிடையாது”.
தண்டனை, பிள்ளைகளை, சுய சந்தேகத்துக்கு உள்ளாக்கி, அவர்களின் சுய மரியாதைக்கு கேடு
விளைவிக்கிறது.
“உன் நண்பர்கள் வந்திருந்த போது, நீ அவர்களுடன் உன் விளையாட்டு பொருட்களை பகிர்ந்து
கொள்ள போராடியதை நான் பார்த்தேன். உனக்கு, பிடித்தமான விளையாட்டு பொருட்களை
உன்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லையோ? அடுத்த முறை, நாம், அதை தனியாக வைத்து
விட்டு உனக்கு எதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யலாம்”.
நேர் நிறை நல்வழிப்படுத்தலில்,(பாசிடிவ் டிசிப்ளின்)
பிள்ளைகளுக்கு, அவர்களே யோசித்து முடிவு எடுக்க வாய்ப்புகளை கொடுத்து, கரிசனத்துடன்
வழி நடத்துவதனால், அவர்களின் சுய மரியாதையை வளர்கிறது.
மூளையை பற்றிய தகவல்:
யுவர் சைல்ட்ஸ் செல்ப் எஸ்டீம் என்ற நூலின் ஆசிரியர் டோரதி பிரிக்க்ஸ் என்ன சொல்கிறார்
என்றால், பிள்ளைகளை நாம் குறும்புக்காரன், பிடிவாதம் பிடிப்பவன், சோம்பேறி, மோசம்
என்றெல்லாம் சொல்லும் போது, அதை அவர்கள் தங்களை பற்றி தாங்கள் நம்ப ஆரம்பித்து
விடுகிறார்கள். இந்த வார்த்தைகள், அவர்களின் மூளையில் இணைக்கப்பட்டு. அவர்கள் வளர்ந்த
பின்பும் அவர்களுடனே தங்கிவிடுகிறது.
இந்த தலைப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்கள் இணையதளத்தில் உள்ள “தண்டனை –
உதவியா அல்லது தடங்கலா” என்கின்ற சிற்றேட்டை படிக்கவும்.
நாள் 8:
நாம் பிள்ளைகளை அடிக்கும்போதோ, திட்டும்போதோ, மிரட்டும்போதோ, அல்லது வெளியேற்றுநேர
ம் (டைம் அவுட்) கொடுக்கும்போதோ, அது அவர்களை காயப்படுத்துவதோடு, தனிமையும் படுத்துகிற
து.
தண்டனை பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே ஒரு பிரிவை ஏற்படுத்துகிறது.
நாம் அவர்கள் பிரச்சனைக்கு, சேர்ந்து ஒரு தீர்வை எடுக்கும்போதும், அவர்களுக்கு பரிவுடன் வரைமு
றைகளை வகுக்கும் போதும், அக்கறையுடன் நல்வழிப்படுத்தும் போதும், அவர்களை மதித்து நம் எதிர்
ப்பார்ப்புகளை சொல்லும் போதும், நம் தவறுக்கு வருந்தும் போதும் அது அவர்களுக்கு, நாம் அவர்கள்,
சொல்வதைக்கேட்டு புரிந்துகொள்கிறோம் என்ற உணர்ச்சியை தருகிறது.
நேர்நிறை நல்வழிப்படுத்தல், (பாசிடிவ்
டிசிப்ளின்) பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள தொடர்பை, முரண்பாடான நேரங்களில்
கூட நிலைக்க வைக்கும்
மூளையை பற்றிய தகவல்:
சென்டர் ஆன் டெவலப்பிங் சைல்ட் ஹார்வர்ட் யுனிவர்சிட்டியின் படி, பெற்றோரின் அன்பான, அரவ
ணைப்பான தொடர்பு, குழந்தைகளின் மூளையின் கட்டமைப்பை வலுவாக்குகிறது.
இந்த தலைப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்கள் இணையதளத்தில் உள்ள “தண்டனை –
உதவியா அல்லது தடங்கலா” என்கின்ற சிற்றேட்டை படிக்கவும்.
நாள் 7:
“உன் சகோதரனை அடிப்பதை நிறுத்து. நீ மிகவும் மோசமாக நடந்து கொள்கிறாய்”. பெற்றோர், மிகவு
ம் கோபமடைந்து அந்த பிள்ளையை அறைந்து விடுகிறார்.
அடிப்பதோ, அல்லது உடல் வலிமையை உபயோகித்து
தண்டிப்பதோ, நம் கோபத்தை வெளிக்காட்ட ஒரு ஏற்ற வழி என்று, அந்த பிள்ளை புரிந்து கொள்
கிறது. நாம் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியாது.
“அடிப்பது சரிகிடையாது. நம் வீட்டில் யாரும் அடிப்பது கிடையாது. வார்த்தைகளை உபயோகித்து உ
ன்னை எது பாதிக்கின்றது என்று சொல்”.
நேர்நிறை நல்வழிப்படுதலை, (பாசிடிவ் டிசிப்ளின்) நாம்
கடைபிடிக்கும் போது, நமக்கு வரும் கோபத்தை, யாரையும் புண்படுத்தாமலும், வன்முறையில்
ஈடு படாமலும், வெளிப்படுத்த முடியும் என்ற முன்மாதிரியாக, நாம் இருக்கிறோம்.
மூளையை பற்றிய தகவல்:
பிள்ளைகளுக்கு, அவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்பவர்கள், அவர்களை காயப்படுத்துவது ,அ
வர்களுக்கு, பேரச்சத்தை தரும்.
அவர்களின் மூளை, சண்டை அல்லது விமானம் (பைட் ஆர் ப்லைட் மோட்) என்ற நிலைக்கு போகிறது.
அந்த பிள்ளைக்கு அங்கிருந்து ஓடிப்போக வேண்டும் அல்லது அடிக்கவேண்டும் என்ற எண்ணம் வருகி
றது.
இந்த தலைப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்கள் இணையதளத்தில் உள்ள “தண்டனை –
உதவியா அல்லது தடங்கலா” என்கின்ற சிற்றேட்டை படிக்கவும்.
நாள் 6:
“நான் உனக்கு அதை வாங்கி தரமாட்டேன். நீ இப்போ அழுகையை நிறுத்தலேன்னா உன்னை
இங்கேயே விட்டு விட்டு போக போறேன்”.
தண்டனையும், மிரட்டலும் அவர்களின் உணர்ச்சிகளை அடக்கி வைக்கிறது. இது
பின்னர் முரட்டுத்தனமாகவோ, மற்றவர்களை அடிப்பது அல்லது கொடுமைப்படுத்துதல்
போன்ற ஆரோக்கியமற்ற வழிகளில் வெளிவருகிறது.
“நீ விரும்பும் பொருட்கள் வாங்க வேண்டும் என்று இருக்கும்போது, நான் இல்லை என்று
சொன்னால், உனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்குமென்று எனக்கு புரிகிறது”.
நேர் நிறை நல்வழிப்படுத்தலில்(பாசிடிவ் டிசிப்ளின்) நாம் அவர்களின் உணர்ச்சிகளை
புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறோம். இது, அவர்களுக்கு, பிற்காலத்தில், அவர்களின்
உணர்ச்சிகளை, கையாள உதவுகிறது.
மூளையை பற்றிய தகவல்:
பிள்ளைகளுக்கு அவர்களின் உணர்ச்சிகளை நல்வழியில் வெளிப்படுத்த நாம் கற்றுக்கொடுக்க
முடியும். அன்பினாலும், ஆதரவான பதில்களினாலும், அவர்களின் மூளையில் உணர்ச்சி
நுண்ணறிவிற்கும் (எமோஷனல் இன்டெலிஜென்ஸ்) திடமான மனதிற்கும் வேண்டிய நரம்பு
தொடர்புகளை வளர்க்கிறது.
இந்த தலைப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்கள் இணையதளத்தில் உள்ள “தண்டனை –
உதவியா அல்லது தடங்கலா” என்கின்ற சிற்றேட்டை படிக்கவும்.
நாள் 5:
தண்டனை குறுகிய காலத்திற்கு மட்டும் தான் பலனை தருகிறது.
பிள்ளைகள் பெற்றோர் வருவதை கண்டு, டி.வியை அணைக்கிறார்கள். திட்டினால் தான் படிக்கிறார்கள். சாப்பிட சொன்னால் தான் சாப்பிடுகிறார்கள். “இதை முடிக்கவில்லை என்றால் ஐஸ் கிரீம் கிடையாது”.
பெற்றோர்களும் பராமரிப்பாரர்களும் கண்டிப்பாக இருந்தால் தான் பிள்ளைகள் இணங்குகிறார்கள். இது நிலையானதும் அல்ல, ஆரோகியமானதும் அல்ல.
நேர்நிறை நல்வழிப்படுத்தல் (பாசிடிவ் டிசிப்ளின்) நீண்ட காலத்திற்கான நல்ல பழக்கத்தை வளர்க்கிறது.
பிள்ளைகளும் பெற்றோர்களும் சேர்ந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்த பின், அந்த பிள்ளையே பொறுப்பை எடுத்துக்கொண்டு தனக்கான நேரம் முடிந்த பின் டி.வியை அணைக்கிறான் அல்லது படிக்க செல்கிறான்.
குழந்தைகளுக்கான விதிகளையும் எதிர்பார்ப்புகளையும் அக்கறையோடு பெரியோர்கள் சொன்னால், பிள்ளைகளே அவர்களுக்கான வரம்புகளை கற்றுக் கொள்வார்கள்.
மூளையை பற்றிய தகவல்:
பிள்ளைகள் முடிவுகள் எடுப்பதிலும், விதிகள் அமைப்பதிலும், பங்கேற்றுக்கொள்ளும் போது, நரம்பியல் பாதையின் மூலம், சிந்தனை மூளை வளர்கிறது. நாளடைவில் சரியான செயலை சரியான காரணத்திற்காக அவர்களால் செய்ய முடியும்.
இந்த தலைப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்கள் இணையதளத்தில் உள்ள “தண்டனை – உதவியா அல்லது தடங்கலா” என்கின்ற சிற்றேட்டை படிக்கவும்.
நாள் 4:
“இங்கே பாரு, எவ்வளவு குப்பையா போட்டு வெச்சருக்க, இப்பவே கிளீன் பண்ணலேன்னா நான் உன்னோட பேச மாட்டேன்.”
அதிகாரத்தை உபயோகித்து பிள்ளையை இணங்க வைக்கிறது தண்டனை. அந்த பிள்ளையும், அதிகாரத்தினாலும் பெற்றோர்களின் அன்பை இழந்து விடுவோம் என்கிற பயத்தினாலும் அதற்கு இணங்குகிறான்
“தரையில் இவ்வளவு பொருட்களின் நடுவே நடப்பது கடினமாக இருக்கிறது முக்கியமாக உன் தாத்தாவிற்கு. விளையாட்டு பொருட்களை இந்த டப்பாவில் போட வேண்டும். வா நாம் இருவரும் சேர்ந்தே அதை செய்யலாம்”.
குழந்தைகளுடன் சேர்ந்து வேலை செய்ய உதவுகிறது நேர்நிலை நல்வழிப்படுத்தல் (பாசிடிவ் டிஸிப்ளின்). பெற்றோர்களும் பிள்ளைகளும் சேர்ந்து ஒரு தீர்வை தேடுகிறார்கள்.
மூளையை பற்றிய தகவல்:
மூளையின் முக்கியமான ஒரு செயல்பாடு நம்மை பாதுகாப்பாக வைத்திருப்பது. அதிகாரத்தை உபயோகித்து பிள்ளைகளை தக்கும்போதோ அன்பை காட்டி மிரட்டும் போதோ மூளை, அபாய நிலையில் செயல்பட தொடங்குகிறது.
இதுவே நாம் நம் பிள்ளைகளுடன் சேர்ந்து ஒரு வேலையை செய்யும்போது அந்த ஆதரவை அவர்கள் உணர்வதோடு அவர்களின் மூளையில் க்ரியேட்டிவிட்டியும் சிந்தனை திறனும் வளர்கிறது.
நாள் -3
“இவ்வளவு குறைவான மார்க் வாங்கியதற்கு நீ வெட்க பட வேண்டும். இனிமேல் நண்பர்களுடன் நீ வெளியே போக கூடாது”.
தண்டனையின் நோக்கம் நடத்தையின் காரணத்தை புரிந்து கொள்ளாமல் அதை நிறுத்துவதே ஆகும்.
“கணக்கு உனக்கு கடினமாக இருக்கிற மாதிரி தெரிகிறது. கூடுதல் பயிற்சி வேண்டுமா? இல்லைனா டியூஷன் போறியா?”
நேர்நிறை நல்வழி படுத்துதலின் (பாசிடிவ் டிஸிப்ளின்) நோக்கம் பிள்ளைகளின் நடத்தையை புரிந்து கொண்டு அவர்களின் சிரமதின் காரணத்தை தெரிந்து கொள்வதாகும்.
மூளையை பற்றிய தகவல்: மூளை எப்பொழுதும் அந்த பிள்ளை கற்கவும், ஆராயவும், சிறந்து செயல்படவும் தூண்டுகிறது. அவர்களால் சிறந்து செயல் பட முடியவில்லை என்றால் நம்மால் எப்படி அவர்களுக்கு ஆதரவாக இருக்க முடியும் என்று நாம் கண்டறிய வேண்டும்.
இந்த தலைப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்கள் இணையதளத்தில் உள்ள “தண்டனை – உதவியா அல்லது தடங்கலா” என்கின்ற சிற்றேட்டை படிக்கவும்.
நாள் -2
“நீஸ்கூலுக்குஒருநாளும்டயத்துக்கு கிளம்பறதுகிடையாது.உன்னோடபெரியதொல்லையாபோச்சு.
டயத்துக்கு கிளம்ப முடியாதுனா வீட்டிலேயே இரு. வாழ்க்கையில் ஒண்ணும் செய்ய வேண்டாம்.”
தண்டனை என்பது முடிந்து போன ஒரு நடத்தையை முன்னிறுத்தி வழங்குவது ஆகிறது இது பிள்ளைகளுக்கு அவமானத்தை தான் தருகிறது
“டயத்துக்கு ஸ்கூலுக்கு கிளம்பறது நம்ம இரண்டு பேருக்குமே கஷ்டமா இருக்கிற மாதிரி தெரியுது.இதை எப்படி சுலபமாக செய்யறதுன்னு நாம இரண்டு பேருமே உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரலாமா?நீ உன்னுடைய ஐடியாவை சொல் நான் கேட்கறேன்".
நேர்நிறை நல்வழிப்படுத்தலால் (பாசிடிவ் டிஸிப்ளின்) பிள்ளைகளுக்கு நாம் ஒரு பிரச்சனைக்கு தீர்வை தேட கற்றுக்கொடுப்பதோடு எதிர்காலத்திற்கு ஒரு புதிய நன்னடத்தையும் கற்று கொடுக்கிறோம்.
மூளையை பற்றிய தகவல்:
பிள்ளைகளின் நடத்தைக்காக அவர்களை அவமானப் படுத்துவது அவர்களுக்கு குற்ற உணர்ச்சியையும் பயத்தையும் தருகிறது இந்த ஒரு மனநிலையில் அவர்களின் மூளை சரியாக சிந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காணும் செயலை செய்ய முடிவதில்லை
நாள் 1:
“கொஞ்சம் தொந்திரவு செய்யாம இருக்கறயா. ஒரு நிமிஷம் சும்மா உட்கார முடியாதா சொன்ன பேச்ச கேட்கலைன்னா ஒரு அடி தான் கிடைக்கும்”
நாம் பிள்ளைகளை வார்த்தைகளாலும் செயல்களாலும் தண்டிக்கிறோம். தண்டனை பிள்ளைகளின் உடம்பையும், மனதையும், உணர்ச்சிகளையும் பாதிக்கின்றது.
உன்னை பார்த்ததால் ஒரு இடத்துல உட்கார கஷ்டப்படற மாதிரி தெரியுது. வெளியே சென்று விளையாடுறயா? அல்லது இங்கேயே உட்கார்ந்து படம் வரைகிறாயா?
பாஸிட்டிவ் டிசிப்லின் பிள்ளைகளின் மனதிற்கும் உடம்பிற்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் குடுக்கும் வகையில் அமைகின்றது.
மூளையை பற்றிய தகவல்:
பிள்ளைகளை அடிக்கும் போதோ அல்லது திட்டும் போதோ மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசால் என்கின்ற ஹார்மோன் சுரக்கிறது. அதிகமான அளவு கார்டிசால் மூளையின் செல்களை அழித்துவிடுகிறது.
இந்த தலைப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்கள் இணையதளத்தில் உள்ள “தண்டனை – உதவியா, தடையா” என்கின்ற சிற்றேட்டை படிக்கவும்

